பாலக்கோட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
தர்மபுரி
பாலக்கோடு:
பாலக்கோடு போலீஸ் நிலையம் சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பாலக்கோடு போலீஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலத்தை இன்ஸ்பெக்டர் தவமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ஸ்தூபி மைதானம், கடைத்தெரு, பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், தக்காளி மண்டி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகவி, கோகுல், எழுத்தர் சின்னசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
Next Story