மின் அமைப்பாளர்கள் சங்கத்தினர் பேரணி


மின் அமைப்பாளர்கள் சங்கத்தினர் பேரணி
x
தினத்தந்தி 2 May 2023 12:30 AM IST (Updated: 2 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மின் அமைப்பாளர்கள் சங்கத்தினர் பேரணி நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பிருந்து தூத்துக்குடி மாவட்ட மின் அமைப்பாளர் சங்கத்தினர் மே தின பேரணி நடத்தினார்கள். மாநில துணை தலைவர் கருப்பசாமி, மாவட்ட தலைவர் செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் மாவட்ட செயலாளர் முருகராஜ், பொருளாளர் சுந்தர்ராஜ், நிர்வாகிகள் கருத்தப் பாண்டி, பாலசுப்பிரமணியன், ஆரோக்கியராஜ், சுடலை மற்றும் நிர்வாகிகள் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். பேரணிக்கு முன்பு மாணவ-மாணவிகள் சிலம்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பேரணியின் போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

பேரணியானது இளையரசனேந்தல் ரோடு, மெயின் ரோடு, புதுரோடு, எட்டயபுரம் ரோடு, ஏ.கே.எஸ்.தியேட்டர் ரோடு வழியாக பயணிகள் விடுதி முன்பு நிறைவடைந்தது.


Next Story