முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை


முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 23 April 2023 12:15 AM IST (Updated: 23 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை

ராமநாதபுரம்

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடத்தினர்.

ரம்ஜான் பண்டிகை

ராமநாதபுரத்தில் த.மு.மு.க., தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம், இஸ்லாமிய ஜனநாயக பேரவை போன்ற அமைப்புகளின் சார்பில் பல்வேறு திறந்த வெளி இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சாயல்குடியில் அல் மஜித்துல் அக்ஷா பெரிய பள்ளிவாசல் ரம்ஜான் தொழுகை நடைபெற்றது. சாயல்குடி ஜமாத் தலைவர் முகம்மது ஜின்னா ரமலான் கொடி ஏற்றினார். ஆலிம் செய்யது இப்ராஹிம்ஷ ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவக்கி ஓதினார். ஜமாத் செயலாளர் குலாம் முகைதீன், பொருளாளர் இப்ராஹிம், முன்னாள் ஜமாத் தலைவர் முத்தலிபு, முன்னாள் செயலாளர் பகுர்தீன் நஜீமுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

சிறப்பு தொழுகை

முதுகுளத்தூரில் செல்வநாயகபுரம் மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. தொண்டியில் ரம்ஜான் பண்டிகையொட்டி ஐக்கிய ஜமாத் சார்பில் பல்லாக்கு ஒலியுல்லா திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகையை பள்ளிவாசல் இமாம்கள் வழிநடத்தினர் அதனை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தொண்டி ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, முன்னாள் ஐக்கிய ஜமாத் தலைவர் பொறியாளர் அபுபக்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் எஸ்.பி.பட்டினம் பெரிய பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஜமாத் தலைவர் ஹசன் அலி ஆலிம், யூனியன் திருவாடானை யூனியன் தலைவர் முகமது முக்தார், ஊராட்சித் தலைவர் சகுபர் சாதிக் கலந்து கொண்டனர்.

பாசிபட்டினம், மருங்கூர், வட்டானம், மச்சூர், பி.வி.பட்டினம், எம்.ஆர்.பட்டினம், நம்புதாளை, சோளியக்குடி, புதுப்பட்டினம், அஞ்சுகோட்டை, திருவாடானை, மங்கலக்குடி, கவலைவென்றான், பெருவாக்கோட்டை, குணங்குடி, வெள்ளையபுரம், ஓரியூர் புதுவயல், சிறுகம்பையூர், நத்தக்கோட்டை ஊமை உடையான்மடை போன்ற இடங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.


Next Story