ராமநாதபுரம்: வழிதவறி வந்த அரிய வகை ஆப்பிரிக்க ஆந்தைகளை வனத்துறையிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலர்கள்


ராமநாதபுரம்: வழிதவறி வந்த அரிய வகை ஆப்பிரிக்க ஆந்தைகளை வனத்துறையிடம் ஒப்படைத்த சமூக ஆர்வலர்கள்
x

வழிதவறி வந்த அரிய வகை ஆப்பிரிக்க ஆந்தைகளை சமூக ஆர்வலர்கள் லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பேருந்து பணிமனைக்கு பின்புறம் உள்ள தியேட்டர் அருகே அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த அரிய வகை ஆந்தைகளை சமூக ஆர்வலர்கள் லாவகமாக பிடித்தனர். இது தொடர்பாக மாவட்ட வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஆந்தைகளை பத்திரமாக மீட்டு கொண்டு சென்றனர். இவை அரிய வகை ஆப்பிரிக்க ஆந்தைகள் எனவும், வழிதவறி இங்கு வந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Next Story