ராமேசுவரத்தில் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும்-கவுன்சிலர் சத்தியமூர்த்தி கோரிக்கை


ராமேசுவரத்தில் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வேண்டும்-கவுன்சிலர் சத்தியமூர்த்தி கோரிக்கை
x
தினத்தந்தி 19 Nov 2022 12:15 AM IST (Updated: 19 Nov 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

ஆன்மிகம், சுற்றுலா தலமான ராமேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை பல்நோக்கு வசதிகள் செய்து தரம் உயர்த்தி கலைஞர் ஆஸ்பத்திரி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 12-வது‌ வார்டு கவுன்சிலர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்..

ராமநாதபுரம்

ஆன்மிகம், சுற்றுலா தலமான ராமேசுவரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை பல்நோக்கு வசதிகள் செய்து தரம் உயர்த்தி கலைஞர் ஆஸ்பத்திரி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என 12-வது‌ வார்டு கவுன்சிலர் சத்தியமூர்த்தி கோரிக்கை விடுத்து உள்ளார்.

12-வது வார்டு கவுன்சிலர்

அகில இந்திய புண்ணிய தலமான ராமநாத சுவாமி கோவில் ராமேசுவரத்தில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தருவது உண்டு இத்தகைய சிறப்பு பெற்ற ராமேசுவரம் நகராட்சி 12-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சத்தியமூர்த்தி. இவர் தனது வார்டு பகுதிகளில் மக்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் ராமேசுவரம் நகராட்சியின் 12-வது வார்டுக்கு உட்பட்ட பள்ளிவாசல் தெரு மற்றும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு செல்லும் தெருவிலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களால் ஆன சாலைைய நகரசபை சேர்மன் நாசர் கான், ஆணையாளர் கண்ணன் ஆகியோருடன் கவுன்சிலர் சத்தியமூர்த்தியும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கவுன்சிலர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-

12-வது வார்டுக்குட்பட்ட பெரிய பள்ளிவாசல் தெரு மற்றும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வீட்டிற்கு செல்லும் தெருவிலும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ரூ.4½ கோடி நிதியில் பேவர் பிளாக் கற்களால் ஆன புதிதாக சாலை அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்துள்ளன. அதுபோல் பள்ளிவாசல் தெரு பகுதியில் உள்ள அப்துல்கலாம் குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்றும் நகர சபை கூட்டத்தில் தீர்மானம் கொடுத்துள்ளேன்.

ஆஸ்பத்திரி பெயர் மாற்றம்

ரெயில்வே பீடர் ரோடு, வண்ணார் தெரு, ராமதீர்த்தம் தெற்கு பகுதி வரையிலும் கழிவுநீர் வாருகாலை முழுமையாக சீரமைத்து தூர்வார வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்றும் நகரசபை கூட்டத்தில் தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. ராமேசுவரத்தில் நகராட்சியில் நடந்த முதல் நகர்மன்ற கூட்டத்திலேயே ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரியின் பெயரை கலைஞர் அரசு ஆஸ்பத்திரி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அது மட்டும் அல்லாமல் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய பல்நோக்கு மருத்துவமனையாக ராமேசுவரம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்றும் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொடுத்துள்ளேன். பள்ளிவாசலை சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் விரைவில் புதிதாக சாலை அமைக்கபடும். இது குறித்தும் நகர மன்ற கூட்டத்தில் மனு கொடுத்துள்ளேன்.

தெருவிளக்குகள்

பெரிய பள்ளிவாசல் தெருவில் இருந்து மல்லிகை நகர் வரையிலும் புதிதாக 23 மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.12-வது வார்டுக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பைகள் முழுமையாக அகற்றி தினமும் சுத்தப்படுத்தபட்டும் வருகின்றது.

ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் நகரசபை சேர்மன் நாசர்கான் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது உடன் நகராட்சி பொறியாளர் அய்யனார் உடன் இருந்தார்.


Related Tags :
Next Story