மழை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா


மழை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா
x

மழை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட தீயத்தூர் வடகோட்டை பகுதியில் மழைமாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 17-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று 10-ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள், காவடி, பால்குடம் எடுத்தும், அலகு குத்திக் கொண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story