ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்


ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
x

ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பள்ளியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ஈரோடு

ஈரோடு ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் ஓணம் பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளிக்கூட வளாகத்தில் மாணவ- மாணவிகள் மிகப்பிரமாண்ட அத்தப்பூ கோலமிட்டு இருந்தனர். மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரிய- ஆசிரியைகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பள்ளிக்கூட செயலாளர் கே.செல்வராஜ், பொருளாளர் ஆர்.குணசேகரன், முதல்வர் டி.நதியா அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளை உற்சாகப்படுத்தினர்.


Next Story