கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது..!


கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது..!
x
தினத்தந்தி 19 Oct 2022 10:32 PM IST (Updated: 19 Oct 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

சென்னை,

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் 2022-23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பபதிவு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தொடங்கியது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். அக்டோபர் 3-ம் தேதி மாலை 5 மணி வரை மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். மேலும் விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், கால்நடை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று கால்நடை மருத்துவர் அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தரவரிசை பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்படும் என்றும் மேலும் விவரங்களை https://adm.tanuvas.ac.in இணைய தளத்தில் அறிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.


Next Story