இளம்ெபண் பலாத்காரம்
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
மேலவெள்ளுர் கிராமத்தை சேர்ந்த முத்துப்பாண்டி (22), கார் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு பெட்ரோல் போட வரும்போது இளம்பெண்ணுக்கும், முத்துப்பாண்டிக்கும் பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று இளம் பெண் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து செல்லும்போது, அந்த வழியாக வந்த முத்துப்பாண்டி அவரை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி காரில் ஏற்றினார். பின்னர் அருகில் உள்ள கருவேல காட்டுக்கு அழைத்து சென்று இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார். இதை வெளியே கூறினால் கொன்று விடுவேன் எனக்கூறி, சாதியை சொல்லி திட்டியதாகவும் தெரிகிறது. இதுகுறித்து இளம்பெண் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர்.