பஞ்சப்பள்ளி அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்-கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்குப்பதிவு


பஞ்சப்பள்ளி அருகே 9-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்-கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே 9-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

9-ம் வகுப்பு மாணவி

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், மாரண்டஅள்ளி அருகே உள்ள சீங்காடு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கோபி (வயது 22) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோபி, ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கடத்தி சென்றார். மேலும் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் மாணவியை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

4 மாத கர்ப்பம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணையில் கூலித்தொழிலாளி கோபி, மாணவியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கோபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story