சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


சிறுமியை பலாத்காரம் செய்த  வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பாலியல் பலாத்காரம்

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள காக்கநல்லூரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவருடைய மகன் தியாகராஜன் (வயது 26).

இவர், 17 வயது சிறுமியை கடந்த 2018-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தார்.

10 ஆண்டு சிறை

இதுகுறித்து அம்பை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர். இதுதொடர்பாக அவர் மீது நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி அன்புசெல்வி விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட தியாகராஜனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார்.


Next Story