கூடலூரில் அரிய வகை ஆந்தை மீட்பு
கூடலூரில் அரிய வகை ஆந்தை மீட்பு
நீலகிரி
கூடலூர்
கூடலூர் செவிடிப்பேட்டையில் உள்ள ஒரு கட்டிடத்துக்குள் பறவை ஒன்று புகுந்து விட்டு வெளியே செல்ல முடியாமல் தவிப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது அரிய வகை ஆந்தை ஒன்று கட்டிடத்துக்குள் புகுந்து வெளியே செல்ல முடியாமல் தவித்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து வனத்துறையினர் பத்திரமாக ஆந்தையை மீட்டனர். பின்னர் நந்தட்டி பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, வன உயிரினங்கள் குடியிருப்பு பகுதிக்குள் வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். .தன் பேரில் விரைந்து வந்து வன உயிரினத்தை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றனர்.
Related Tags :
Next Story