அப்பன் வெங்கடாஜலபதி கோவிலில் ரதசப்தமி தீர்த்தவாரி
சேரன்மாதேவி அப்பன் வெங்கடாஜலபதி கோவிலில் ரதசப்தமி தீர்த்தவாரி நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி தாமிரபரணி ஆற்றங்கரையில் அப்பன் வெங்கடாஜலபதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ரதசப்தமியை முன்னிட்டு பெருமாள் தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான தீர்த்தவாரி விழா நடந்தது. இதையொட்டி காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் பெருமாள் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரியின் போது பக்தர்கள் எருக்கஞ்செடி இலையை தலையில் வைத்து கோவிந்தா கோஷம் முழங்க தீர்த்தவாரியில் கலந்து கொண்டனர். பின்னர் சாற்றுமுறை தீர்த்தம் முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. மாலையில் சீனிவாச திருக்கல்யாண வைபவமும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ெபருமாளை தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story