முட்புதரில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல்
தடங்கம் கிராமத்தில் முட்புதரில் பதுக்கிய ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே தடங்கம் கிராமத்தில் சாலையோர முட்புதரில் கேட்பாரற்று ரேஷன் அரிசி முட்டைகள் கிடப்பதாக அலுவலர்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து நல்லம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையிலான அலுவலர்கள் விரைந்து சென்று 10 மூட்டைகளில் 512 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அலுவலர்கள் நடத்திய விசாரணையில் பெங்களூருவுக்கு இந்த ரேஷன் அரிசியை கடத்த பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. மேலும் முட்புதரில் அரிசியை பதுக்கியவர்கள் குறித்து அலுவலர்கள் விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Related Tags :
Next Story