லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடகாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

வாகன சோதனை

ஓசூர் பாகலூர் ரோடு, ஜி.ஆர்.டி.சர்க்கிள் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 10 டன் அளவிலான ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் ஓசூர் அருகே கொல்லப்பள்ளியை சேர்ந்த ஜாகீர் அகமத் (வயது 30) என்பதும், கிருஷ்ணகிரியில் இருந்து கர்நாடக மாநிலம் பங்காருபேட்டைக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை ேபாலீசார் கைது செய்தனர். மேலும் லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 பேர் கைது

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த ரேஷன் அரிசியை ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த பாபு, திருப்பத்தூரை சேர்ந்த சிவா ஆகியோர் குறைந்த விலைக்கு வாங்கி கர்நாடகாவுக்கு லாரியில் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் லாரியுடன் ரேஷன் அரிசியை உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story