வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்


வேனில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 8 Nov 2022 12:15 AM IST (Updated: 8 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலத்தில் வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி

காரிமங்கலத்தில் வேனில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரேஷன் அரிசி கடத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி விற்பனைக்காக கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவிட்டார்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ராமச்சந்திரன் மற்றும் போலீசார் தர்மபுரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

டிரைவர் மீது வழக்கு

அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். அதில் 1,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தர்மபுரியை சேர்ந்த சிங்காரவேலு (வயது 43) என்பதும், வெளி மாநிலத்திற்கு அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அலுவலர்கள் வேனுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story