2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 3 May 2023 12:15 AM IST (Updated: 3 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி அருகே ஒரு பகுதியில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் மூடை, மூடையாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா உத்தரவின்பேரில், ராமநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில், குமாரசாமி, முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் பரமக்குடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பரமக்குடி அல்லுக்கூடம் தெருவில் வேதா வியாசர் மடம் அருகில் பாழடைந்த கட்டிடத்தில் 2,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பரமக்குடியை சேர்ந்த ரங்காச்சாரி என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story