700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x

சங்ககிரி ரெயில் நிலையத்தில் கேரளாவுக்கு 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சங்ககிரியில் இருந்து ரெயில் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படை தாசில்தார் ராஜேஸ்குமார், வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் அலுவலர்கள் சங்ககிரி ரெயில் நிலையத்தில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது ரெயில் நிலைய நடைபாதையில் கேட்பாரற்று கிடந்த மூட்டைகளை பிரித்து பார்த்தனர். அதில் மொத்தம் 700 கிலோ ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக வைத்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அதை கடத்த முயன்றவர்கள் குறித்து அலுவலர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story