ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது


ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
x

ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் போலீசார் நேற்று டானா கிராமம் எரிகல்பாறை வடக்கு தெரு பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 20 மூடைகளில் ரேஷன் அரிசி மூடைகள் பதுங்கி இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக கடையம் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த கோபால் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கீழக்கடையத்தை சங்கர் என்பவரை தேடி வருகின்றனர்.


Next Story