ரேஷன் அரிசியை அரைத்து குருணையாக விற்பனை; 2,300 கிலோ பறிமுதல்


ரேஷன் அரிசியை அரைத்து குருணையாக விற்பனை; 2,300 கிலோ பறிமுதல்
x

ரேஷன் அரிசியை அரைத்து குருணையாக விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, 2,300 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா நெய்வாசல் பட்டி அருகே பழனியப்பன் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் ரேஷன் அரிசியை குருணையாக அரைத்து வெளியூர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக திருமயம் வட்ட வழங்கல் அலுவலர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட கிடங்கை சோதனையிட்டபோது குருணையாக ஆயிரம் கிலோ, பழுப்பு கலந்த அரிசியாக ஆயிரம் கிலோ, ரேஷன் அரிசியாக 300 கிலோ என மொத்தம் 2,300 கிலோ அரிசியை கைப்பற்றினார். மேலும் அதனை புதுக்கோட்டை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தார். ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வேம்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story