ரேஷன் அரிசி கடத்தல்; 5 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்தல்; 5 பேர் கைது
x

ரேஷன் அரிசி கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரம் ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்துவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த ஆட்டோவில் 1800 கிலோ எடை உடைய 36 மூடைகள் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. உடனே ஆட்டோவுடன் ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதை தொடாந்து செல்லூர் பகுதியை சேர்ந்த பிரபு (வயது 45), காமராஜர் சாலை அருண்ராஜ்(27), முருகன் (42), பெரியசாமி (22), மற்றொரு முருகன் (30) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பரவை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர் கல்யாணசுந்தரம் என்பவரை தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story