ரூ.12 லட்சத்தில் ரேஷன் கடை
அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.12 லட்சத்தில் ரேஷன் கடையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.12 லட்சத்தில் ரேஷன் கடையை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.
திறப்பு விழா
அருப்புக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி மைதானம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம், சொக்கலிங்கபுரம் ஜவகர் சங்கத் தெருவில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமை வகித்தார்.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தையும், புதிய ரேஷன் கடை கட்டிடத்தையும் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.
ரேஷன் பொருட்கள்
பின்னர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு, நகர்மன்ற உறுப்பினர்கள் கோகுல், இளங்கோ, அல்லிராணி, ஜெய கவிதா, சங்கீதா, கூட்டுறவுத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.