சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா
அதிராம்பட்டினம் காந்திநகரில் சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அதிராம்பட்டினம், மே.29-
அதிராம்பட்டினம் காந்திநகரில் சேதமடைந்த ரேஷன் கடை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ரேஷன் கடை
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கூட்டுறவு ரேஷன் கடை பராமரிப்பபின்றி சேதமடைந்த நிலையில் உள்ளது.இதனால் ரேஷன் கடையில் இருந்த அரிசி, பருப்பு சர்க்கரை.போன்ற அத்தியாவசிய பொருட்கள் வீணாகுகிறது. ரேஷன் கடை கட்டிடம் மோசமான நிலையில் சேதமடைந்து , விரிசல்கள் ஏற்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் பொருட்கள் மழை நீரில் நனைந்து வீணாகுகிறது.
புதிய ரேஷன் கடை
இதனால் ரேஷன் கடை அருகில் உள்ள காந்திநகர் கிராமத்துக்கு சொந்தமான சிமெண்டு சீட் கட்டிடத்தில் கடந்த 2 வருடமாக வாடகை இல்லாமல் இயங்கி வருகிறது. இந்த கட்டிடமும் பழுதடைந்து மழைக்காலங்களில் பொருட்கள் மழை நீரில் நனைந்து வருகிறது.இந்த பகுதி இயற்கை பேரிடர்களான புயல், மழை, வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாகும். எனவே இங்கு அரிசி, சீனி, மண்எண்ணெய் போன்றவற்றை பாதுகாப்பாக வைத்து வினியோகம் செய்ய பாதுகாப்பான கட்டிடங்கள் அவசியம். எனவே பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.