விழுப்புரம் ரேஷன் கடையில்மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு


விழுப்புரம் ரேஷன் கடையில்மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் ரேஷன் கடையில் மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம்


தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தின்படி, ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது. இந்த அரிசி, பிளாஸ்டிக் அரிசி என்றும், பழுப்பு நிறமாக உள்ளதாகவும், பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி, தரமானதுதான் என்பதை விளக்கி கூறி, விழிப்புணர்வு ஏற்படுத்த உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி விழுப்புரம் மந்தக்கரை, கைவல்லியர் தெருவில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடையில் வினியோகம் செய்யப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசியை பயன்படுத்தி பொதுமக்கள் முன்னிலையில் சமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. பின்னர் அதன் ருசி, தரம் ஆகியவை ஆய்வு செய்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் செறிவூட்டப்பட்ட அரிசியின் தரம் நன்றாக இருப்பதால் பொதுமக்கள் யாரும் பயப்படாமல் பயன்படுத்தலாம் என்றும், ரேஷன் கடைகளில் முறைகேடு ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது துணைப்பதிவாளர் (பொது வினியோகம்) நளினா, நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் யுவராஜ், தரக்கட்டுப்பாட்டு அலுவலர் சக்தி ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story