ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்


ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x

ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருநெல்வேலி

நெல்லை:

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் இயங்கிவரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பொது வினியோக திட்டத்திற்கு என்று தனித்துறை உருவாக்கப்பட வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியை சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை ரேஷன்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) நடக்கிறது.


Next Story