ரேஷன் கடை ஊழியர் படுகாயம்


ரேஷன் கடை ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 24 Aug 2023 2:30 AM IST (Updated: 24 Aug 2023 2:31 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் கார் மோதிய விபத்தில் ரேஷன் கடை ஊழியர் படுகாயமடைந்தார்.

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மண்டவாடியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 35). நிதி நிறுவன அதிபர். இவர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் திண்டுக்கல்லுக்கு காரில் வந்து கொண்டிருந்தார். சுள்ளெறும்பு நால்ரோடு அருகே கார் வந்த போது, அவருடைய மகன் காரை சாலையோரத்தில் நிறுத்தும்படி கூறினார். இதையடுத்து செல்வராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்தினார்.

அப்போது ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒட்டன்சத்திரம் அருகே பெரியகோட்டை புதூரை சேர்ந்த ரேஷன் கடை தற்காலிக ஊழியர் முத்துக்குமார் (20) படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story