ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 May 2023 12:30 AM IST (Updated: 5 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

பொதுவினியோக திட்டத்துக்கு தனி துறை உருவாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும். அரிசி கடத்தலை தடுக்க ஏதுவாக அவை எப்படி கடத்தப்படுகிறது என்பதை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஒருநாள் சிறுவிடுப்பு எடுக்கும் போராட்டம் மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. தேனி மாவட்டத்தில் ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று ஒருநாள் விடுப்பு எடுத்து, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பொன்அமைதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுராம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து மாவட்ட தலைவர் பொன்அமைதியிடம் கேட்டபோது, 'மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் நேற்று மூடப்பட்டன. அங்கு பணியாற்றும் பணியாளர்கள் ஒருநாள் சிறுவிடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்' என்றார். இந்த போராட்டத்தால் மாவட்டத்தில் பல இடங்களில் ரேஷன் பொருட்கள் வினியோகம் பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story