நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்


நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர், மாவட்ட துணைத்தலைவர் தனசேகர், மாவட்ட இணை செயலாளர் அன்பரசன், மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ஏ.சி.சேகர் கோரிக்கை வலியுறுத்தி கண்டனஉரை ஆற்றினார். இதில் மத்திய அரசு வழங்கியது போல் 1.7.2022 முதல் நிலுவையுடன் அகவிலைப்படி வழங்க வேண்டும்.

பொது வினியோகத் திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும். நியாயவிலைக் கடையில் சரியான எடையில் பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும்.

ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு நேரடியாக நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும்.

பழைய ஓய்வூதியம், அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம், 1.4.2003 முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் துரிஞ்சாபுரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நன்றி கூறினார்.


Next Story