ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்


ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்
x

ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

நாகப்பட்டினம்

மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து நாகையில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தத்திலும், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்தம்

ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன் ராஜாவை தாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாகை மாவட்டத்தில் நேற்று ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயச்சந்திரன்ராஜா மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.

பொதுமக்கள்

ஏமாற்றம்

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக நாகை நகரில் உள்ள ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்


Next Story