ரேஷன்கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும்
ரேஷன்கடைகளுக்கு சரியான எடையில் பொருட்களை வழங்க வேண்டும் என சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அணைக்கட்டில் நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயவேலு, செயலாளர் ரமேஷ் பாபு, பொருளாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் நந்தகோபால் வரவேற்றார்.
மாநில செயலாளர் செல்வம் கலந்து கொண்டு முக்கிய முக்கிய தீர்மானங்களை கொண்டு வந்தார். உணவுப் பொருட்கள் வழங்கும் துறையை தனித்துறையாக அறிவிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். குடோன்களில் இருந்து ரேஷன்கடைகளுக்கு அளிக்கும் பொருட்களை சரியான எடை அளவில் வழங்க வேண்டும்.நடைமுறையில் உள்ள காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி புதிய காப்பீடு திட்டம் அறிவிக்க வேண்டும். ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை தரமானதாக அனுப்ப வேண்டும் என கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட தலைவர் மகேந்திரன் நன்றி கூறினார்.