ரேசன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளம் பிடிக்க உத்தரவு


ரேசன் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: சம்பளம் பிடிக்க உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2022 2:21 AM GMT (Updated: 2022-06-07T08:02:39+05:30)

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று 7-ந் தேதி முதல் 9-ந்தேதி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. (No Work No Pay) என்ற அடிப்படையில் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூட்டுறவுத்துறை மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்கள் நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து ரேசன் கடைகளை திறக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

ரேசன் கடை பணியாளர் இன்று முதல் 3 நாட்களுக்கு வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில் கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Next Story