திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் ரேஷன் கடை-தானிய கிடங்கு கட்டிடம்
மகாராஜபுரம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 1 ஆண்டாக திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் ரேஷன் கடை-தானிய கிடங்கு கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
மகாராஜபுரம் ஊராட்சியில் கட்டி முடிக்கப்பட்டு 1 ஆண்டாக திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் ரேஷன் கடை-தானிய கிடங்கு கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேஷன் கடை- தானிய கிடங்கு கட்டிடம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகாராஜபுரம் ஊராட்சியை சேர்ந்த கண்ணுக்கினியனார் கோவில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ரூ.12 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரேஷன் கடை மற்றும் தானியங்கி கிடங்கு கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் கட்டு முடிக்கப்பட்டு ஒரு ஆண்டாகியும், இதுவரை திறக்கப்படவில்லை. இதனால் கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. இதனால் சமுதாய கூடத்தில் ரேஷன் இயங்கி வருகிறது. இங்கு பொதுமக்கள் நின்று பொருட்கள் வாங்க போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை வைக்க போதிய இடம் இல்லாமல் உள்ளது.
1 ஆண்டாக பூட்டியே கிடக்கிறது
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் மகாராஜபுரம் ஊராட்சியில் கண்ணுக்கினியனார் கோவில் கிராமத்தில் ரேஷன் கடை மற்றும் தானிய கிடங்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் பூட்டியே திறக்கப்படாமல் உள்ளது. ஊராட்சிக்கு சொந்தமான சமுதாய கட்டிடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லாமல் உள்ளது. ரேஷன் பொருட்கள் வைக்கவும் இடவசதி இல்லாமல் உள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் ரேஷன் கடை மற்றும் தானிய கிடங்கு கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.