ராவிள்ள கே.ஆர்.ஏ. பள்ளிகளின் விளையாட்டு விழா
கோவில்பட்டி ராவிள்ள கே.ஆர்.ஏ. பள்ளிகளின் விளையாட்டு விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி ராவிள்ள கே.ஆர்.ஏ, பள்ளிகளின் 28-வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மைத்திரி பிரியா அருண் தலைமை தாங்கினார். பள்ளி தலைவர் அருண் செல்வராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜான்சிராணி வரவேற்று பேசினார். விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் ராம்குமார் வாசித்தார். தொடர்ந்து மாணவ- மாணவிகளுக்கும், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அர்ஜூனா விருது பெற்ற பி.கணேசன், மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரி கண்ணன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். மெட்ரிகுலேஷன் பள்ளி சேம்பியன் கோப்பையை சோழா அணியும், சி.பி.எஸ்.இ. பள்ளி சேம்பியன் கோப்பையை பாண்டியஅணியும் பெற்றனர். சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் ஷெல்டன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story