ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும்


ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும்
x

உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

விருதுநகர்


உணவுப்பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.

அதிகரிப்பு

சில மாதங்களாக அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதிலும் குறிப்பாக அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிச்சந்தையில் 15 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்யவும் முடிவெடுத்துள்ளது.

இதேபோன்று வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிச்சந்தையில் 2 லட்சம் டன் வெங்காயம் விற்பனை செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனாலும் பொருட்களின் விலை உயர்வு காரணமாக சில்லறை பணவீக்க சதவீதம் இதுவரை இல்லாத வகையில் 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலை விட அதிகமாகும்.

உயர்த்த வாய்ப்பு

இந்தநிலையில் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மே மாதம் முதல் வங்கி வட்டி சதவீதத்தை உயர்த்தியநிலையில், தற்போது 6.25 சதவீதமாக உள்ளது. கடந்த 3 முறை நடந்த ரிசர்வ் வங்கியின் பொருளாதார கொள்கை ஆய்வு கூட்டத்தில் வங்கி வட்டி சதவீதத்தை உயர்த்த வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. அதேபோன்று இம்மாத முதல் வாரத்தில் நடந்த ஆய்வு கூட்டத்திலும் வங்கி வட்டி சதவீதத்தை அதேநிலையில் வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்தால் ரிசர்வ் வங்கி சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் வங்கி வட்டி சதவீதத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டு விடும் என்றும், எனவே மத்திய அரசு உணவு பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும் எனவும் பொருளியல் நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.


Next Story