தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு நிலங்களின் குத்தகைகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
குத்தகை விவரங்களை ஒரு மாதத்தில் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை வடக்கு கிராமத்தில்,ரூ.36.58 கோடி வாடகையை செலுத்தாவிட்டால் நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்ற தாசில்தாரின் உத்தரவை எதிர்த்து ஹோட்டல் சார்பில் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 ஆண்டு கால குத்தகை பெற்றுவிட்டு கூடுதலாக 15 ஆண்டுகள் வாடகை செலுத்தாமல், ஹோட்டல் நடத்தி வருவதாக கூறி கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலை காலி செய்து, நிலத்தை ஒரு மாதத்தில் மீட்கவும், வாடகை பாக்கியை வசூலிக்கவும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story