மாவட்ட மைய நூலகம் முன்பு வாசகர்கள் முற்றுகை போராட்டம்


மாவட்ட மைய நூலகம் முன்பு வாசகர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:52 AM IST (Updated: 21 Jun 2023 4:18 PM IST)
t-max-icont-min-icon

நூலகம் முன்பு வாசகர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பலர் கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர்

சேலம்

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் தினமும் ஏராளமானவ வாசகர்கள் வந்து பல்வேறு புத்தகங்கள் எடுத்து படித்து வருகின்றனர். பலர் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றும் படித்து வருகிறார்கள். மேலும் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பலர் நூலகத்திற்கு சென்று பொது அறிவு, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுநூலகம் முன்பு வாசகர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பலர் கூடி முற்றுகை போராட்டம் நடத்தினர். இது குறித்து அவர்களிடம் கேட்ட போது நூலகத்தில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி போராட்டம் நடத்தி உள்ளோம் என்று கூறினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story