ரியல் எஸ்டேட் அதிபர் திடீர் சாவு
வள்ளியூரில் ரியல் எஸ்டேட் அதிபர் திடீரென இறந்தார்.
வள்ளியூர்:
சென்னை மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரோஸிநாயுடு (வயது 53). இவரது நண்பர் ராஜேஸ்வரன் (வயது 53). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வள்ளியூருக்கு வந்தனர். அங்குள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழிலுக்காக இடம் பார்த்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் விடுதிக்கு சென்று தூங்கினர். நேற்று அதிகாலையில் ரோஸிநாயுடுவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜேஸ்வரன் அவரை வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு ரோஸி நாயுடுவை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்ததும் வள்ளியூர் போலீசார் விரைந்து வந்து ரோஸிநாயுடு உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.