கலைஞர் பகுத்தறிவு பாசறை கூட்டம்
கலைஞர் பகுத்தறிவு பாசறை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது
தென்காசி
கடையநல்லூர்:
கடையநல்லூரில் கலைஞர் பகுத்தறிவு பாசறை உறுப்பினர்கள் கூட்டம், செய்யது மசூது தலைமையில் நடைபெற்றது. சாகுல் ஹமீது வரவேற்றார். தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுந்தர மகாலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், வருகிற 8-ந்ேததி தென்காசி மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடையநல்லூரில் உற்சாக வரவேற்பு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. நகர பொருளாளர் நெடுமாறன், மாநில பேச்சாளர் எம்.என்.இஸ்மாயில், முன்னாள் நகர செயலாளர் முகமது அலி, அமுதம் இஸ்மாயில் மற்றும் பாசறை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story