நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், அனைத்து மதங்கள், மொழிகள் மற்றும் பிராந்திய மக்களிடம் தேசிய மற்றும் வகுப்புவாத ஒற்றுமையை ஊக்குவித்தல் மற்றும் கடைபிடித்தல் தொடர்பான "சத்பவ்னாதிவாஸ்" என்ற நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை வாசிக்க, அதை திரும்ப கூறி அனைத்து துறை அரசு ஊழியர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வேடியப்பன், குமரேசன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டர் அலுவலக மேலாளர் (பொது) சண்முகம் உள்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story