சட்டப்பணி குழு சார்பில் சமரச தினம்


சட்டப்பணி குழு சார்பில் சமரச தினம்
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் சட்டப்பணி குழு சார்பில் சமரச தின நிகழ்ச்சி நடந்தது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை வட்ட சட்டப்பணி குழு சார்பில் சமரச தின நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து நடந்த நிகழ்ச்சிக்கு வட்ட சட்டப்பணிக்குழு தலைவரும், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவருமான சுனில் ராஜா தலைமை தாங்கினார். வழக்கறிஞர் சங்க இணை செயலாளர் கார்த்திகை ராஜன் வரவேற்று பேசினார். அரசு வழக்கறிஞர் பரணிந்தர் சமரசம் குறித்து விளக்கி பேசினார்.

நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மூர்த்தி வெங்கடேஷ், சக்திவேல், அருண் மாரியப்பன், நித்தியானந்தன் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிக்குழு பணியாளர் ஜெயராமசுப்பிரமணியம் செய்திருந்தார். பின்பு சமரசதினம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நீதிபதி சுனில் ராஜா தலைமையில் வழக்கறிஞர்கள் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர்.


Next Story