தர்மபுரியில் நல்லிணக்க தின உறுதிமொழி ஏற்பு-கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது


தர்மபுரியில் நல்லிணக்க தின உறுதிமொழி ஏற்பு-கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
x

தர்மபுரியில் நல்லிணக்க தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

தர்மபுரி

ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி நல்லிணக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்டு 20-ந் தேதி (சனிக்கிழமை) அரசு விடுமுறை என்பதால் நல்லிணக்க தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி, நல்லிணக்க தின உறுதிமொழியை வாசித்தார். அப்போது அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் பழனிதேவி, நசீர் இக்பால், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அய்யப்பன், கலெக்டர் அலுவலக மேலாளர்கள் கேசவமூர்த்தி, அன்பு உள்பட அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story