சமரச வாரவிழா விழிப்புணர்வு பேரணி
திருக்கோவிலூர் நீதித்துறை சார்பில் சமரச வாரவிழா விழிப்புணர்வு பேரணி மாஜிஸ்திரேட்டு தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் நீதித்துறை சார்பில் வட்ட சமரச மையக்குழு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் சார்பில் சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மாவதி தலைமை தாங்கினார். வக்கீல் சங்க செயலாளர் சுவிஜி.சரவண்ணக்குமார் வரவேற்றார். திருக்கோவிலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு வெங்கடேஷ்குமார் பேரணியை தொடங்கி வைத்தார். இதில் வக்கீல்கள் செல்வராஜ், ராஜபாண்டியன், அன்பு, வேல்முருகன், மருதுசேஷன், வினோத்பாபு, தேவகி, மீனாட்சி உள்ளிட்ட வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டு சமரசத் தீர்வு மையத்தின் செயல்பாடுகள் மற்றும் நன்மைகள் குறித்தும், இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் பேசினார்கள். முடிவில் தலைமை எழுத்தர் சிவக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story