சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி


சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 11 April 2023 12:15 AM IST (Updated: 11 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி நீதிபதிகள் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையம் சார்பில் வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி சமரச வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட 3-வது அமர்வு நீதிபதி கீதாராணி தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி வீரண்ணன், கூடுதல் சார்பு நீதிபதி தனசேகரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி முகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்டவர்கள் நீதிமன்றங்களில் செலவு செய்து பல ஆண்டுகளாக வழக்குகள் தீர்வுக்காக காத்திருப்பதை விட சமரசம் மையம் மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கண்டு பயன்பெற வேண்டும் என பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் பிடித்து சென்றனர்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி கச்சேரி சாலை, சேலம் மெயின் ரோடு, கடைவீதி, மந்தவெளி கச்சிராயப்பாளையம் சாலை, காந்தி ரோடு வழியாக சென்று மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் முடிவடைந்தது. பேரணியில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சுகந்தி, குற்றவியல் நீதித்துறை விரைவு நீதிபதி கண்ணன், வக்கீல்கள் சங்க தலைவர் ராமசாமி, செயலாளர் சீனிவாசன், வக்கீல் இளையராஜா மற்றும் வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story