குமாரபாளையத்தில்பூட்டிய வீட்டுக்குள் பரிதவித்த 2 வயது பெண் குழந்தைஜன்னல் கம்பியை அறுத்து தீயணைப்பு படையினர் மீட்டனர்
நாமக்கல்
குமாரபாளையம்
குமாரபாளையம் திருவள்ளுவர் வீதியில் வசிப்பவர் சுரேஷ். இவரது மகள் அனன்யா (வயது 2). நேற்று மாலை அனன்யா வீட்டில் உள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தை திடீரென உள் அறையில் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு பரிதவித்தது. மீண்டும் கதவை திறக்க தெரியாமல் குழந்தை அழுதது. திடீரென குழுந்தையின் அழுகை குரல் கேட்டு சுரேஷ் ஓடி வந்தார். அப்போது குழந்தை அறையில் தாழ்பாள் போட்டு வெளியே வரமுடியாமல் தவித்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுரேஷ் குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story