2 வாலிபர்கள் பிணமாக மீட்பு


2 வாலிபர்கள் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கிய 2 வாலிபர்கள் பிணமாக மீட்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

ஓசூர் சீதாராம் மேடு பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் ஹரீஷ் (வயது18), ராஜகணபதி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் மது (17). இவர்கள் நண்பர்கள் 5 பேருடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோபசந்திரம் என்ற இடத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது ஹரீஷ், மது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 2 வாலிபர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 நாட்களாக தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 4-வது நாளாக நேற்றும் தீயணைப்பு படையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரீஷ் உடல், பாத்தகோட்டா ஆற்றிலும், மதுவின் உடல், திருமலைகோட்டா ஆற்றிலும் பிணமாக மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story