அய்யன்கொல்லி அருகே 1½ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அய்யன்கொல்லி அருகே 1½ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே அத்திசால் மலப்பொட்டு பகுதியில் வருவாய்துறைக்கு சொந்தமான 1½ ஏக்கர்நிலத்தை ஆக்கிரமித்து இஞ்சி, காப்பி உள்ளிட்ட பயிர்கள் பயிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பயிர்களை கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணக்கண்ணன் உத்தரவுபடி தாசில்தார் நடேஷன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் மற்றும் வருவாய் துறையினர் வெட்டி ஆக்கிரமிப்புகளை அகற்றம் செய்தனர் அந்த நிலம் மீட்கப்பட்டது. வருவாய்துறை நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story