விருத்தபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 16.67 ஏக்கர் நிலம் மீட்பு


விருத்தபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 16.67 ஏக்கர் நிலம் மீட்பு
x

விருத்தபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 16.67 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை

ஆவுடையார்கோவில் அருகே திருப்புனவாசலில் விருத்தபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உட்பட்ட கோவில்களான தீயத்தூர் சுந்தரராஜப்பெருமாள் கோவில், செங்கமாரிபுலிக் குத்தியம்மன் கோவில், வேலிமங்கலம் பிள்ளையார் கோவில், நாட்டாணி புரசக்குடி சித்திவிநாயகர் கோவில், காவதுகுடி வலம்புரி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சொந்தமான 16.67 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மேற்படி கோவிலுக்கு சொந்தமான நிலத்தினை கோவில் வசம் ஒப்படைக்காவிடில் தமிழ்நாடு அரசு இந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டம் பிரிவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவில் செயல் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையில், கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ரெத்னாவதி, கோவில் செயல் அலுவலர் கார்த்திகேயன், ஆவுடையார்கோவில் சரக ஆய்வாளர் திவ்யபாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் மூலம் நேற்று 16.67 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.


Next Story