திருச்செந்தூரில் மாயமான வக்கீல் குளத்தில் பிணமாக மீட்பு


திருச்செந்தூரில் மாயமான வக்கீல் குளத்தில் பிணமாக மீட்பு
x

திருச்செந்தூரில் மாயமான வக்கீல் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் மாயமான வக்கீல் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

மாயமான வக்கீல்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 48). இவர் வக்கீலாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி மகேசுவரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கடந்த 9-ந்ேததி விவேகானந்தன் திருச்செந்தூர் கோர்ட்டுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு, காரில் புறப்பட்டு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிணமாக மீட்பு

இந்த நிலையில் நேற்று காலையில் திருச்செந்தூர் கோவில் தெப்பக்குளத்தின் அருகில் விவேகானந்தனின் கார் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. இதையடுத்து தெப்பக்குளத்திலும், அருகில் உள்ள ஆவுடையார்குளத்திலும் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விவேகானந்தனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆவுடையார்குளத்தில் விவேகானந்தன் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தார். அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆவுடையார்குளத்தில் குளித்தபோது விவேகானந்தன் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். திருச்செந்தூரில் மாயமான வக்கீல் குளத்தில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story