கிருஷ்ணர் கோவிலில் திருட்டு போன ஐம்பொன் சிலைகள் மீட்பு


கிருஷ்ணர் கோவிலில் திருட்டு போன ஐம்பொன் சிலைகள் மீட்பு
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஊத்தங்கரை பாம்பாறு அணை அருகே கிருஷ்ணர் கோவிலில் திருட்டு போன ஐம்பொன் சிலைகள் குடிநீர் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டனர்.

கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை

ஊத்தங்கரை பாம்பாறு அணை அருகே கிருஷ்ணர் கோவிலில் திருட்டு போன ஐம்பொன் சிலைகள் குடிநீர் தொட்டியில் இருந்து போலீசார் மீட்டனர்.

ஐம்பொன் சிலைகள் திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணையின் கரையோரத்தில் வாசுதேவ கிருஷ்ணர் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடைத்து சக்கரத்தாழ்வார், ராமானுஜர், வாசுதேவ கண்ணன், ராதாருக்குமணி, ராமானுஜர் ஆகிய 5 ஐம்பொன் சிலைகளை திருடி சென்றனர். இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று கோவில் அருகில் உள்ள குடிநீர் தொட்டி உடைந்து இருந்தது. இதையடுத்து நிர்வாகிகள் குடிநீர் தொட்டியை திறந்து பார்த்தனர். அப்போது திருட்டு போன ஐம்பொன் சிலைகள் தண்ணீர் தொட்டியில் கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சிலைகள் மீட்பு

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சிலைகளை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தேடுவதை அறிந்த மர்ம நபர்கள் குடிநீர் தொட்டியில் ஐம்பொன் சிலைகளை போட்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் சிலைகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பூசாரியிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து பூசாரி சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து போலீசார் சிலைகளை திருடி, குடிநீர் தொட்டியில் போட்டு சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story