பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு
பிரம்மபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டது
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா நெல்லித்தோப்பு கிராமத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த கோவிலுக்கு சொந்தமான 1.12 ஏக்கர் விளை நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தன. இந்த நிலங்களை மீட்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி ஆக்கிரமிப்பில் இருந்த 1.12 ஏக்கர் நிலத்தை தஞ்சை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் தாசில்தார் சங்கர், கோவில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் கோவில் பணியாளர்கள் மீட்டனர். மேலும் அந்த இடத்தில் இந்த இடம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இதில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
Related Tags :
Next Story